மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த அக்டோபர் மாதம் 27 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போனார். இது குறித்து காணாமல் போன வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.


பல நாட்களுக்கு போலீஸாருக்கு துப்பு கிடைக்காத நிலையில், ஒரு துருப்பாக இறந்தவரின் ஒத்த செருப்பு கிடைத்தது. இந்த வழக்கில் மூன்று பேர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அதில் ஒருவரின் பெண்ணுக்கும் காணாமல் போன இணைஞருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது.
அந்த தொடர்பு குறித்து பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்துள்ளது. அந்த நபர் தன் மனைவியின் செல்போனில், தனக்குத் தெரிந்திராத எண்ணில் இருந்து வந்த இரண்டு மிஸ்டு கால்களை பார்த்திருக்கிறார். அடுத்த நாள் காணாமல் போன இளைஞர் அப்பெண்ணைப் பார்க்க வந்துள்ளார். தனது மனைவியைப் பார்க்க வந்த இளைஞரைக் கொலை செய்ய நண்பர்கள் இருவருடன் காத்திருந்துள்ளார். 




பூம்பூம் மாடு.. Phone Pe.. டிஜிட்டல் புரட்சி.. வீடியோ வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..


மனைவியைக் காண வந்த அந்த நபரை தனது இரண்டு கூட்டாளிகளும் சேர்ந்து வயிற்றிலும் கழுத்திலும் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர். பிறகு உடலை கள்ளச்சாராயம் காய்ச்சும் தங்கள் இடத்துக்கு எடுத்துச் சென்று அங்கு பிணத்தை எரித்தனர். பிறகு எலும்புகளை பல்வேறு இடங்களில் போட்டு விட்டுச் சென்றனர். 
விசாரணை மேற்கொண்ட போலீஸார் முதலில் கூட்டாளியை கைது செய்தனர். இவரிடம் ‘முறைப்படி’ நடத்திய விசாரணையில் தப்பியோடிய 2 பேர் பற்றிய தகவல் கிடைக்க அவர்களை போலீஸார் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வைத்துக் வைத்துக் கைது செய்தனர்.


கொலையுண்ட 27 வயது நபரின் செருப்பு ஒன்று கொலையாளியின் வீட்டின் முன் கிடந்துள்ளது. இதன் மூலம் கொலைக்குற்றவாளி யார் என்பதை போலீஸார் துல்லியமாகத் துப்புத் துலக்கிக் கண்டு பிடித்தனர்.  


குற்றமிழைப்பவர்கள் அவர்களையும் அறியாமல் சாட்சியாக எதையாவது விட்டுச் செல்வார்கள் என்ற கிரிமினாலஜியில் கூறப்படுகிறது. உடலை எரித்து எலும்புகளை ஆங்காங்கே போடும் அளவுக்கு கிரிமினல் புத்தியுடன் திட்டமிட்ட கொலையாளிகள், கொலை செய்ய்ப்பட்டவரின்  செருப்புகளால் சிக்கிக் கொண்டனர்.


ஒருவேளை சம்பந்தமே இல்லாமல் அங்கி கிடந்த செருப்பைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை வளையத்துக்குள் மட்டுமே கொண்டு வராமல் இருந்திருந்தால் இந்த வழக்கில் குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பி இருப்பார்கள்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண