விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்  ஆடிட்டோரியத்தின் பின்புறம் உள்ள முள் புதரில் நேற்று மாலை 5 மணியளவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை அந்த வழியாக சென்ற ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் சத்தம் கேட்ட இடத்தின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை வரவழைத்து அந்த குழந்தையை மீட்டு அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


3 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால்... காதலன் வீட்டில் காதலி தூக்கிட்டு தற்கொலை!


இது பற்றிய தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவினாயகம் தலைமையிலான போலீசார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் வந்து அந்த குழந்தை குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அந்த குழந்தையின் தாய் யார்? என்று தெரியவில்லை. இதனால் கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை அதன் தாய் முள்புதரில் வீசி சென்றாரா? அல்லது குடும்ப வறுமையால் குழந்தையை வீசி சென்றாரா? கல்நெஞ்சம் படைத்த அந்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



வீட்டுக்குள் துப்பாக்கி ஃபேக்டரி! யூடியூப் பார்த்து தயாரிப்பு! போலீசாரை அதிர வைத்த இளைஞர்கள்!


விழுப்புரம் மாவட்டத்தில் சமீப மாதங்களாக ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 6 மதங்களுக்கு முன்பாக ஐந்து வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். ஆனால் தற்போது வரை அடையாளம் காணமுடியாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது. காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிசிடிவி அமைக்கபட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் அதில் சிக்காமல் குழந்தைகளை முட்புதர்களில் தூக்கி போட்டுவிட்டு செல்கின்றனர். இக்காலத்தில் பலர் குழந்தைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பலரின் மனதை பதைபதைக்க வைக்கிறது. 


NASA: இது பிரபஞ்சத்தின் விசித்திரம்..எல்லாமே மர்மம்.. புதிய கண்டுபிடிப்பால் ஷாக்கான நாசா!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண