சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே பயங்கர ஆயுதங்கள் தயாரித்து வந்த சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரதாப் (24) மற்றும் சேலம் எருமாபாளையம் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25) ஆகிய இரண்டு வாலிபர்களையும் கியூ பிராஞ்ச் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கியூ பிராஞ்ச் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பள்ளியில் வேலை செய்து வருவதாக கூறி கடந்த ஆறு மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் தனியார் பள்ளி மற்றும் செல்போன் கடையில் வேலை செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்து வந்ததாக தெரிகிறது. 



அப்போது சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியில் இயங்கி வரும் கல் குவாரியில் லாரிக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவலை இரண்டு வாலிபர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி ஆவர். நவீன் சக்கரவர்த்தி பிபிஏ படித்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாவர். இவர்கள் இருவரும் ஏற்காடு அடிவாரம், குரும்பம்பட்டி கிராமப் பகுதியில் வீடு ஒன்றை எடுத்து , அங்கு துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குரும்பபட்டி பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது அந்த வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்களான வெல்டிங் மெஷின், இரும்பு ராடு உள்ளிட்ட ஏராளமான உபகரணங்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்து கொண்ட காவல்துறையினர் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சந்தன வீரப்பன் மற்றும் விடுதலை புலி இயக்க பிரபாகரன் மீது தங்களுக்கு அதீத பற்று உள்ளது. புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள், யூடியூபில் துப்பாக்கி செய்யும் செயல்முறைகளை கற்றுக்கொண்டு சிறிய வகை துப்பாக்கி தயாரித்துள்ளனர். அதன்பின் பெரிய அளவிலான துப்பாக்கியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் தயாரித்த துப்பாக்கியுடன் ஓமலூர் வழியாக மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அப்போது ஓமலூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர். அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டுள்ளார் நவீன் சக்கரவர்த்தி இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்பியதாக கூறப்படுகிறது. 


ஆனால் இவர்கள் இதுவரை எந்த குற்ற வழக்கிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் எதற்காக யூடியூப் பார்த்து துப்பாக்கி தயார் செய்தார்கள். கத்தி, முகமூடி வைத்திருந்ததற்கான காரணம் என்ன? இவர்கள் தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா? காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.