பட்ஜெட் மொபைல் நிறுவனமாக அறியப்படும் Vivo தனது அடுத்த மொபைல் சீரிஸை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது . விவோவின் அடுத்த ஸ்மார்ட்போன் இப்போது சீனா டெலிகாம் பட்டியலில் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் Vivo T2 5G என்பதே அடுத்த மாடலின் பெயராகும்.டெலிகாம் இணையதளத்தில் மாடல் எண் V2199GA என குறிப்பிட்டிடுக்கிறது vivo. மாடல் எண்ணின் அடிப்படையில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட iQoo Neo 6 SE இன் மொபைல் மாடல்களின் வேறு பெயராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Vivo T2 5G வசதிகள் :
வரவிருக்கும் விவோ டி-சீரிஸ் கைபேசியானது ஸ்னாப்டிராகன் 870 SoC (Snapdragon 870 SoC) மூலம் இயக்கப்படுகிறது. Vivo T2 5G ஸ்மார்ட்போனில் ஒரு துளை-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது .8GB RAM + 128GB, 8GB RAM +256GB மற்றும் 12GB RAM + 256GB. என மூன்று திறன்களில் சந்தைப்படுத்தப்படலாம் . அதில் அடிப்படை மாடலான 8ஜிபி ரேம்+ 256ஜிபி சேமிப்பக மாடல் CNY 2,199 என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 25,500 ரூபாய். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் Vivo T2 5G ஆனது 6.62-இன்ச் (2,400x1,080 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
64 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய Vivo T2 5G இல் டிரிபிள் ரியர் கேமரா வசதிகள் அடங்கும் . அதே போல செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி வரையில் உள்ளீட்டு நினைவகத்தை நீட்டித்துக்கொள்ளவும் முடியும். Vivo T2 5G ஆனது 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
மேலும், ஸ்மார்ட்போனில் USB Type-C போர்ட் மற்றும் GPS இணைப்பு விருப்பங்கள் இருக்கும். இது 163.00×76.16×8.54 மிமீ மற்றும் 190 கிராம் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் வரும் ஜூன் 6 ஆம் தேதி சீனாவில் முதற்கட்டமாக வெளியாகவுள்ளது. நீலம் மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.