பிரபஞ்சம் எவ்வளவு விரைவாக விரிவடைகிறது என்பதை கண்டறிய நாசா செயல்படுத்தி வரும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி நமது பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது. நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் இந்த விசித்திரமான நடவடிக்கையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதிலிருந்து இதுவரை இப்படி ஒரு நடவடிக்கையை கண்டதில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் நாசா தனது செய்திக் குறிப்பில் இதில் மிகப்பெரிய மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளது.


நாசா செயல்படுத்தியுள்ள இந்த தொலைநோக்கியானது பிரஞ்சத்தின் விரிவாக்க வீதத்தை அளவிட உதவுகிறது. இந்த தொலைநோக்கியில் இருந்து பெறப்படும் தரவுகள் மிகவும் துல்லியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வினோத செயல்பாட்டிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.






நாசா நிறுவனம் தொடர்ந்து விண்வெளியில் தங்களது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாசா நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்டது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நமது அண்டை விண்மீன் மண்டலத்தில் இருந்து சில அதிரவைக்கும் காட்சிகளை பகிர்ந்திருக்கிறது.


நாசாவின் தகவல்படி, ஹப்பிளை பின்தொடர்ந்து வரும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது அண்டை விண்மீன் மண்டலத்தில் நடைபெறும் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை நாசா டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.






GIF வகை புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள இந்த மங்கலான படம், கூர்மைப்படுத்தப்பட்டு மின்னும் நட்சத்திங்களை போன்று கிரகங்களை காட்டுகிறது. நாசாவின் முந்தைய முயற்சியான ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொலைநோக்கியில் பதிவு செய்த காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த வெப் தொலைநோக்கியில் பெரிய ரக கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அகச்சிவப்பு வானத்தை இன்னும் தெளிவாக பார்க்க உயர்தர டிடெக்டர்கள் இதில் உள்ளது. தொலைநோக்கியின் MIRI மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. MIRI என்பது மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகும். இதில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகளானது, விண்மீன் வாயுக்கள் குறித்து ஆய்வாளர்கள் நன்கு அறிந்துக் கொள்ள உதவுகிறது.






நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது ஹப்பிளின் வாரிசாக அழைக்கப்படுகிறது. தற்போது சோதனையில் உள்ள இந்த தொலைநோக்கியானது ஜூன் 2022-ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த புதிய தொலைநோக்கியின் பெரிலியம் கண்ணாடியானது 18 ஹெக்ஸாகோனல் கோல்ட் பிளேடட்டைக் கொண்டிருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக இது இருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கி 25 சதுர மீடட்ர் பரப்பளவை கொண்டிருக்கிறது. இந்த புதிய தொலைநோக்கி ஹப்பிளை விட 6 மடங்கு பெரியதாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.