உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமையன்று 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் இரு சகோதரர்கள் கோடரியால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோடாரியால் வெட்டிக்கொலை:


கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சராய் அகில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முசாபர்பூர் திக்ரி கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ப்ரீத்தி என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் தொடர்ந்து தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.


இதை அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ரீத்தியை  எச்சரித்த போதிலும் அவர் தொடர்ந்து அந்த இளைஞனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவரது தந்தை மன்ரகான் சிங் மற்றும் அவரது இரு சகோதரர்களான ராதேஷ்யாம் சிங் மற்றும் கன்ஷ்யாம் சிங் ஆகியோர் நேற்று ப்ரீத்தியை கோடரியால் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளனர்.


தொடரும் கொடூரம்:


 மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் (SP), பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


 இந்த ஆண்டு ஜனவரியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் 22 வயது பெண் அவரது சொந்த குடும்பத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியை அவரது தந்தை மற்றும் மூன்று சகோதரர்கள் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கொலை செய்யப்பட்ட பின், சந்தேக நபர்கள் சிறுமியின் உடலை காலியான பக்கத்து வீட்டில் புதைத்ததாகக் கூறப்படுகிறது.


உயிரிழந்த சிறுமி ஜோதி யாதவ் என்பது தெரியவந்தது. கரண் சிங் என்ற 23 வயது நபருடன் அவர் தொடர்பு வைத்திருந்ததால் அவரது குடும்பத்தினர் இணைந்து கொலை செய்துள்ளனர்.  சிறுமியின் உடலை அடக்கம் செய்வதை அப்பகுதியில் இருக்கும் ஒருவர் பார்த்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து அந்த நபர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.          


CM Stalin: ”ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உண்டா?.." கிழித்து தொங்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!


National Award to Teachers 2023: தேசிய நல்லாசிரியர் விருது.. தமிழ்நாட்டில் இருவர் தேர்வு.. எந்த ஊர் ஆசிரியர்கள் தெரியுமா?