கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை  சிறுமி அதே ஊரில் உள்ள பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாள். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பாரதி என்கிற பார்த்திபன் (25), வெங்கடேசன் மகன் டிரைவர் பிரபா (27), சுப்ரமணியன் மகன் கோபி (26), அப்பாதுரை மகன் அருள் (24) ஆகிய 4 பேரும் மயக்க மருந்து தடவிய கை குட்டையால் முகத்தில் அமுக்கி சிறுமியை கடத்தினர்.


Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ




இதில் மயக்கம் அடைந்த சிறுமியை காரில் கடத்தி, காட்டுப்பையூர் கிராமம் அருகே உள்ள இளைய பெருமாள் கோவில் பின்பு தூக்கிச் சென்று 4 வாலிபர்களும் கூட்டு பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டதாக  தெரிகிறது.


TN Assembly: "நீட்டால செத்தது போதும்" - சட்டசபையில் ஸ்டாலின் உணர்வுப்பூர்வ உரை


பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம், நாங்கள் 4 பேரும் உன்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டோம். இதை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவோம் என கத்தியைக் காண்பித்து  மிரட்டி உள்ளனர். இதையடுத்து சிறுமியை காரில் அழைத்து கொண்டு, கிராமத்தின் அருகே வந்து விட்டுவிட்டு 4 பேரும் தப்பி சென்றனர்.



இதற்கிடையே நடந்த சம்பவத்தை சிறுமி, தனது தாயிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுவில்  ஈடுபட்ட 4 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 9 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வ  செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


NEET Suicide : நீட் தேர்வு.. தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ்


Udhayanidhi Response on NEET : நான் யாரையும் குறை சொல்ல விரும்பலங்க.. - உதயநிதி