மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமன் கோட்டகம் காலனி தெருவை சேர்ந்தவர் 70 வயதான சித்திரன். இவரது 15 வயது மகன் பிரகாஷ் என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 60 வயதான பிச்சைக்கண்ணு மற்றும் கலியபெருமாள் என்பவரின் 35 வயது மகன் பாலமுருகன் இவர்களுக்கும், சித்திரன் குடும்பத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Aditi Shankar: அழைப்பிதழோடு ரவுண்டடிக்கும் ஷங்கர்! அதிதிக்கு திருமணமா? அப்போ சினிமாவுக்கு டாட்டாவா??
இந்நிலையில், பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால், நேற்று இரவு அவரது தந்தை சித்திரன் கடுமையான திட்டியுள்ளார். இதனைக் கேட்ட பிச்சைக்கண்ணு, அவரது மனைவி ஜெயலட்சுமி, பாலமுருகன், இவரது மனைவி காளியம்மாள் மற்றும் பிச்சைக்கண்ணு மருமகள் பிரியா ஆகிய 5 பேரும் சேர்ந்து தங்களை தான் சித்திரன் குடிபோதையில் திட்டுகிறார் என அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த சித்திரன் மனைவி அஞ்சம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோரையும் கடுமையான தாக்கியுள்ளனர். அப்போது பிச்சைக்கண்ணு, அங்கு கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து சித்திரனை பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்த சித்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் சித்திரன் மனைவி, அவரது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
Rajakannappan: அவதூறு புகார் அளித்ததாக, பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பு கண்டனம்..
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பனார்கோயில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர், கொலையான சித்திரன் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கம்பக்கத்து வீட்டினர் பிரச்சினையில் 70 வயதான முதியவர் என்றும் பாராமல் ஐந்து பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.