பிக்பாஸ்

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். கவினுடன் காதல், கண்டித்த தந்தை, சேரனின் பாசம் என நிகழச்சியை சுவாரஸ்யமாக்கியதில் லாஸ்லியாவுக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவராகிவிட்டார்.

அவரது கையில் கணிசமான அளவு படங்கள் உள்ள கூகுள் குட்டப்பா திரைக்கு வர உள்ளது.  ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கம் பிரண்ட்ஷிப் படத்தில் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் லாஸ்லியா. அர்ஜூன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஸ், சக்தி, வேல்முருகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

Continues below advertisement

ஒருபக்கம் திரைப்படம் என்றால் மறுபக்கம் சோஷியல்  மீடியாவிலும் படு ஆக்டீவாக இருக்கிறார் லாஸ்லியா. நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டார். வழக்கமான புஸ்புஸ் உடல்வாகை மாற்றி, சற்றே மெலிந்து தலை முடியை கட் செய்து ஆளே மாறிவிட்டார். திடீரென உடம்பை இந்த அளவுக்கு குறைத்துவிட்டாரே என ரசிகர்கள் தொடர்ந்து ஆச்சரியப்பட்ட நிலையில் அதற்கான பதிலை தற்போது தெரிவித்துள்ளார் லாஸ்லியா. 

ஒல்லியானது ஏன்?

நேர்காணல் ஒன்றில் பேசிய லாஸ்லியா தான் ஒல்லியானது ஏன் என்பது குறித்தும் பேசியுள்ளார். அதில்,  எனக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்தது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை. முன்பெல்லாம் நான் ஒல்லிதான். பிக்பாஸ் வந்த பிறகே நான் குண்டாக ஆனேன். அதனால் மீண்டும் எடையைக் குறைத்து பழைய நிலைக்கு திரும்பினேன். இதுமட்டுமின்றி சினிமாதான் அடுத்த இலக்கு என்றாகிவிட்டது. அதற்கு தயாராகவே இப்படி உடல் எடையைக் குறைத்தேன். எல்லாமும் காரணம்தான் என்றார்.