மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.
Vijay Politics Entry Public Opinion : விஜய் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? பொதுமக்கள் கருத்து என்ன?
இந்நிலையில் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாக மதுபானம் கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று நள்ளிரவு மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
திண்டுக்கல்: காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
அப்போது, அவ்வழியாக சந்தேகம்படும் விதமாக வந்த மினி சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் ஏதும் இன்றி காணப்பட்டுள்ளது. இருந்தும் சந்தேகம் தீராத காவல்துறையினர் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் மீண்டும் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காவல்துறையிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க நூதன முறையில் சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை வாகனத்தின் பிரத்யேகமாக தனி இடம் அமைத்து மறைத்து வைத்து காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது.
Covid-19: புதிய வகை கொரோனா தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்துக - மத்திய அரசு உத்தரவு
இதனை அடுத்து வாகனத்தில் 60 அட்டை பெட்டிகளில் இருந்த 3000 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை மயிலாடுதுறை தனிப்படை காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் சண்முகம் மற்றும் அவருடன் இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 3 லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மயிலாடுதுறை காரைக்கால் எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டால், இதுபோன்ற கடத்தலை முற்றிலும் தடுக்கலாம் எனவும், இதனை சரியான முறையில் மேற்கொள்ளமால் இருப்பதே இதுபோன்ற கடத்தலுக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.