கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மனைவி ஹெலன். இவர் திண்டுக்கல் அருகே உள்ள தெப்பக்குளத்துப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இதற்காக திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார். இவருடைய மகன் ஸ்டீகோரெயான் (23), தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


தேனி : கமிஷன் வர்ல.. கூட்டத்துக்கு நோ..! வைரலாகும் திமுக வார்டு கவுன்சிலரின் ஆடியோ!!




இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெப்ரினா (20) என்பவரை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் கோவையில் வீடு எடுத்து குடும்பம் நடத்தினர். இதற்கிடையே ஸ்டீகோரெயான் சென்னையில் வேலை செய்ய விரும்பினார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி ஸ்டீகோரெயான் தனது தாய் ஹெலனிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து மகன் மற்றும் மருமகளை சமாதானம் செய்து வைக்க ஹெலன் முடிவு செய்தார். இதனால் 2 பேரையும் திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைத்தார். அதன்படி நேற்று 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஹெலன் வீட்டுக்கு வந்தனர்.




அங்கு 2 பேருக்கும் ஹெலன் அறிவுரை கூறினார். அதோடு இன்று காலையில் ஹெலன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ஸ்டீகோரெயான், ஜெப்ரினா ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஸ்டீகோரெயான், ஜெப்ரினாவை கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் கத்தியால் அவரின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெப்ரினா பரிதாபமாக இறந்தார். பின்னர் தனது காதல் மனைவியை கொலை செய்த விரக்தியில், ஸ்டீகோரெயான் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் அவருக்கு கால், இடுப்பு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.




அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த ஸ்டீகோரெயானை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் ஜெப்ரினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் காதல் மனைவியை, தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Sasikala: சசிகலாவின் கடைசி அஸ்திரம் காலி... அதிமுக பொதுச் செயலாளர் ரத்து செல்லும் என நீதிமன்றம் உத்தரவு!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண