உலக நாடுகள் சிலவற்றில் XE வகை கொரோனா தொற்று புதிதாக பரவி வருவதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அந்த வகை தொற்று தீவிரமாக பரவும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வகை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய வகை கொரோனா தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த XE வகை கொரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஐஐடி சார்பில் வெளியான ஆய்வு ஒன்றில் வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் நான்காவது கொரோனா அலை பரவும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு புதிதாக சில வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 19 கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் மொத்தமாக 10,889 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது.
மேலும் படிக்க:லேசான கொரோனா பாதிப்பு கூட ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் - ஐஐடி ஆய்வு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்