உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே பாடிய பாடலினால் ஏற்பட்ட தகராறில் 23 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.


திருமணம் என்றாலே கோலாகல கொண்டாட்டம்தான். திருமணம் என்றால் சில நாட்களுக்கு முன்னதாகவே கொண்டாட்டம் தொடங்கிவிடும். உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை என வீடே களைக்கட்டும். குறிப்பாக திருமணத்தின்போது பாட்டு, கச்சேரி, ஆட்டம் பாட்டம் என செம ஜாலியாக இருக்கும். ஆனால் அப்படி மகிழ்ச்சிக்காக போடப்பட்ட ஒரு பாட்டு கொலையில் முடிந்துள்ளது. சந்தோஷமாய் தொடங்கிய கல்யாண வீடு ரணகளமாய் மாறி இப்போது போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே பாடிய பாடலினால் ஏற்பட்ட தகராறில் 23 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.


கமாரியா என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு, அங்குள்ள விவசாயி ஒருவரின் மகளின் திருமண விழா நடைபெற்றது.  விழாவின் போது, விருந்தினர்களில் ஒருவர் டிஜேவிடம் ஒரு பாடலைத் திரும்ப திரும்ப இசைக்கும்படிச் சொன்னார். ஆனால், இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலூர் : "17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யவில்லை"- வெளியான காவல்துறை ரிப்போர்ட்: முழு விவரம்!


Yuvaraj full details : ‛ஈவு இரக்கம் இல்லாத கொலை முதல் ஈமு கோழி மோசடி வரை’ யார் இந்த ‛வாட்ஸ் ஆப்’ யுவராஜ்!


சிறிது நேரத்தில், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், விருந்தினர்களில் ஒருவரான வீரு லால், 23, இரு தரப்பினருக்கு இடையேயான பிரச்சனையை சமாதானம் செய்ய முயன்றபோது. அவர் தடியால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இது தொடர்பாக மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


chennai: அண்ணன் பெயரை வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை...! வெளிநாட்டிற்கு தப்பிய நபர் - சிக்கியது எப்படி?


ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடும் வட மாநிலத்தவர்களை கைது செய்வது சவாலாக உள்ளது - நெல்லை மாநகர காவல்துறை ஆணையர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண