10 ஆம் வகுப்பு படிக்கும் 17 மாணவிகளை பிராக்டிகல் கிளாஸ்களுக்கு வரவழைத்து உணவில் போதைப்பொருள் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேத்தில் நடந்துள்ளது.
மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள புர்காசி பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் மயக்க மருந்து கலந்த கிச்சடியை மாணவிகளுக்கு வழங்கி இந்த சம்பத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கடந்த நவம்பர் 18 ஆம் தேதியன்று, புர்காஜி நகரின் இரண்டு பள்ளி மேலாளர்கள் போபாவைச் சேர்ந்த 17 சிறுமிகளை GGS இன்டர்நேஷனல் பள்ளியில் இரவு நேரத்தில் வரவழைத்து, அவர்களின் உணவுகளில் போதைப்பொருள் கலந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க: Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு
பெண் ஆசிரியர் யாரும் சிறுமிகளுடன் இல்லை என்றும், சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த பிறகும், போலீசார் பள்ளி மேலாளர்களைக் காப்பாற்ற முயற்சித்ததாக மாணவிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
17 நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வால் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது இந்த விஷயம் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையானவர்கள் என்பதால், அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று கூறியதால் சில மாணவிகள் இந்த விஷயம் குறித்து வெளியில் கூறவிலை. ஆனால், சில மாணவிகள், மறுநாள் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு நடந்த முழு சம்பவத்தையும் குடும்பத்தினரிடம் கூறினர்.விடிய விடிய ஆட்டம்.. மாடல் நடிகைகள்.. கைமாறும் போதை.. கேரள ரெசார்ட்டும்.. ரேவ் பார்ட்டிகளும்!
இதன்பிறகு, இந்தச் சம்பவத்தை கிராம தலைவர், வாட்ஸ்அப் மூலம் மாவட்ட எஸ்பி அபிஷேக் யாதவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.எஸ்பி யாதவ், குற்றச்சாட்டுகளை சரிபார்த்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்தார்.
இது தொடர்பாக இரண்டு பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இரு பள்ளி உரிமையாளர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 15 சிறுமிகளின் பெற்றோர் இதுவரை புகார் எதுவும் கொடுக்காததால் குற்றச்சாட்டுகளை சரிபார்க்க விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்