தனது அத்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டில் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. பெண்கள் முதல் குழந்தைகள் வரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான செய்திகளும், புகார்களும் தொடர்ந்து வருவது மக்கள் இடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் வந்த நிலையில், சிறுவர்கள் மீது நடக்கும் பாலியல் தொல்லைகளும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.


Youtube Prankster Surya | பல பேருடன் காதல்....மோசடி யூ ட்யூபரால் இளம்பெண் தற்கொலை!


இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது அத்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளான். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது அத்தை, தனியாக இருக்கும்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குழந்தைகள் நல அமைப்புக்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, நேரில் வந்த குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் 16 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர். அப்போது தனது அத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் கூறினார்




இதனைத் தொடர்ந்து,  சிறுவனை அழைத்துச்சென்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் உமா மகேஸ்வரி சிறுவனிடம் விசாரணை செய்தபோது, சிறுவன் தனது அத்தை தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். அதன் பின்னர் சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனின் அத்தை  மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 5-ஆம் தேதி அன்று சொத்து தகராறில் ஏற்பட்ட சண்டையில் கைதுசெய்யப்பட்ட பாத்திமா சிறைச்சாலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


திருமணம் செய்கிறேன் என வன்கொடுமை.. தப்பியோடியவரை 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெண்!