குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அம்மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அடுத்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்குப் பிறகு முதல்வரானவர். கடந்த 2016 முதல் குஜராத் முதலமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ராஜினாமாவுக்குப் பிறகு ரூபானி, குஜராத் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருப்பது பெரும் கவுரவம் என்று கூறினார்.


"கட்சியில் உள்ள பொறுப்புகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இது கட்சியில் இயல்பான செயல். ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. இது ஒரு சிறந்த வாய்ப்பு, ”என்று அவர் கூறினார்.


 






ரூபானி ஆகஸ்ட் 7, 2016 அன்று முதல்வராக பதவியேற்றார். 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரனில் ராஜ்யகுருவை தோற்கடித்து ராஜ்கோட் மேற்கு தொகுதியை அவர் தக்கவைத்தார்.டிசம்பர் 22, 2017 அன்று சட்டமன்றக் கட்சியின் தலைவராக ரூபானி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மன்சுக் மாண்டவியா, பர்ஷோத்தம் கோடாபாய் ரூபலா மற்றும் நிதின் படேல் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Thirumavalavan | தமிழ்நாடு புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்