திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண். இவர் சிறுவயதில் பெற்றோரை இழந்து தனியாக சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த பெண் படிப்பு முடிந்தவுடன் கடந்த 2007ம் ஆண்டு முதல் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர் . அப்போது, அங்கு அவருடன் பணியாற்றிய செய்யாறு பகுதியை சேர்ந்த சிவக்குமார் வயது (45) என்பவருடன் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இருவருக்கிடையே நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது அதனைத்தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து, சிவக்குமார் திருமணம் செய்வது கொல்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணை அவர் அழைத்து வந்து திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்த அவருக்கு கருக்கலைப்பு செய்து, தனக்கு அரசு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சிவக்குமார் , திடீரென பெண்ணிடம் சொல்லாமல் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண். சிவக்குமாரை பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, சிவக்குமார் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் உள்ள மண் பரிசோதனை பிரிவில் வேளாண் அலுவலராக பணியாற்றி வருவதாக அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்ற அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், சிவக்குமார் திருமணத்திற்கு மறுத்து விட்டு உண்ணை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், சிவக்கு மார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன்கொடுமையில் இருந்து விட்டு திருமணம் செய்யாமல் மாயமானவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கண்டுபிடித்து காவல்துறையிடம் புகார் செய்த சம்பவம் திருவண்ணாமலை நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.