காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே பெரியநத்தம் கிராமத்தில் 125 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளைபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52) நேற்று அமாவாசை என்பதால் தனது குடும்பத்துடன் கணபதியின் மனைவி செல்வி இவர்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் முன்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர் முடியாததால், பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து மாகறல் போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே 125 பவுன் தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பீரோவில் இருந்து 125 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற திருடர்கள் மற்றொரு பீரோவில் இருந்து 20 சவரன் நகையை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாகறல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது, காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அடுத்துள்ள பெரிய நத்தம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 125 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 20 லட்ச ரூபாய் பணமும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்