Stock Market Update: இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
இன்று மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 216.23 புள்ளிகள் அதிகரித்து 59973.07 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 54.05 புள்ளிகள் அதிகரித்து 17,791.00 புள்ளிகளாக உள்ளது.
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் வீழ்ச்சியில் சென்றிருந்த பங்குச் சந்தைகள், கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன.
லாபம்- நஷ்டம்
மாருதி சுசுகி, ரிலையன்ஸ், என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், டைட்டன், நெஸ்டல், அப்போலோ, கோடக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, சன் பார்மா, ஐசிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.
ரூபாய் மதிப்பு நிலவரம்
இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து 82.48 என்ற அளவில் உள்ளது
மேலும் படிக்க