கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், தாந்தோணி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 27.10.2022 பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து, தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர்  முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடு மற்றும் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு, இரண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வழங்கினார்கள்.


 




 


பின்னர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மகானதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெள்ள நீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளையும், கருர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காதபாறையில், வெள்ளநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளையும், கரூர் மாநகராட்சி வெங்கமேடு கொங்கு நகரில் வெள்ளநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளையும், பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு மகானதபுரம், கிருஷ்ணராயபுரம் 2, மாயனூர், காதப்பாரை ஆகிய இடங்களில் இயங்கி வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறித்து கேட்டு அறிந்து, பின்னர் உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடுகள், அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.


 




தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகானதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் தானியம் உலர் களம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கரூர் மாநகராட்சி வெங்கமேடு கொங்கு நகரில் உள்ள நூண் உயிர் உரம் தயாரிப்பு மையத்தினையும், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பறை கட்டுவதற்காக சேதம் அடைந்த வகுப்பறை கட்டிடம் இடிக்கும் பணிகளையும், தாந்தோணி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாடி கட்டிடங்களை புணரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகளின் தேவைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் கைத்தறி துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் இ.ஆ.பா அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


 




முன்னதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் அனைத்து துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம். லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், மாவட்ட வளங்கள் அலுவலர் தட்சிணாமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், பாலகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிருஷ்ணமூர்த்தி, வினோத்குமார் (தாந்தோணி) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.