Share Market: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமானது. 


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 190.43 அல்லது 0.29 % புள்ளிகள் அதிகரித்து  63,511.21  ஆகவும்,  தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 44.45 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 18,853.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


செக்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. செக்செக்ஸ் 63 ஆயிரத்து 588 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பவர்க்ரிட், எல் அண்ட் டி, இந்துஸ்தான் யுனிலிவர், விப்ரோ, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 


லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:


பவர்கிரிட் கார்ப், ஹெச்.டி,எஃப். சி. லைப், லார்சன், டாடா கன்ஸ், விப்ரொ, ஓ.என்.ஜி.சி. டெக் மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், டாக்டர். ரெட்டி லாப்ஸ்,. பாரதி ஏர்டெல்,கோல் இந்தியா, ஹீரோ மோட்டர்காப், பிரிட்டானியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜார்ஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ. என்.டி.பி.சி.உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.


நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:


ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல், ஹினடால்கோ, அப்பல்லோ மருத்துவமனை, டாடா மோட்டர்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிவிஸ் லேப்ஸ், சிப்ளா, மாருதி சுசூகி, சன் பார்மா, அதானி எண்டர்பிரைசர்ஸ், பஜார்ஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஈச்சர் மோட்டர்ஸ், நெஸ்லே, எம் அண்ட் எம், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.சி.எல். டெக், க்ரேசியம், டைட்டன் கம்பெனி, பஜார்ஜ் ஃபின்சர்வ், இந்தஸ்லெண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.


ஏழு மாதங்களுக்கு பிறகு, சென்செக்ஸ் 63 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஏழு மாதங்களாக சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார நிலமை, அதிக வட்டி விகிதம், பணவீக்கம் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. மேக்ரோ என்னாமிக் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு  உயர்ந்துள்ளது. 




மேலும் வாசிக்க..


PM Modi US Visit: ஐ.நாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி.. 4 நாள் பயண திட்டம் என்ன?


TN Rain Alert: குடையுடன் வெளிய போங்க.. அடுத்த 3 மணிநேரத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சில்லென ஒரு வானிலை அப்டேட்..