Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 270.27அல்லது 0.30 % புள்ளிகள் உயர்ந்து 72,016.54 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 57.70 அல்லது 0.26% உயர்ந்து 21,780.80 ஆக வர்த்தகமாகியது.


பிப்ரவரி மாதத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலக அளவிலான அசாதாரண சூழல் உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதத்தில் 0.5% சரிவை சந்தித்திருந்தது. மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரி விதிமுறைகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச்சந்தையில் அதன் தாக்கம் எதிரொலிக்கும். 


சந்தை முதலீட்டாளர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பு வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமாக்குதல் குறித்து அறிவிப்பு வெளியானாது. ஆனாலும், அது இன்னும் நடைமுறைப்படுதப்படவில்லை.’ பிரதமர் மந்திரி அனைவருக்கும் வீடு’(Pradhan Mantri Awas Yojna) என்ற திட்டம் 3-5 ஆண்டுகளுள் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இடைக்கால பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


மாருதி சுசூகி, பவர்கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டஎர்ஸ், என்.டி.பி.சி., எம் &எம், டி.சி.எஸ்., பி.பி.சி.எல்., சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஹீரோ மோட்டர்கார்ப், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், டாடா மோட்டர்ஸ், கோல் இந்தியா, கோடாக் மஹிந்திரா,அப்பல்ல்ப்ப் மருத்துவமனை’ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


டாகடர். ரெட்டீஸ் லேப்ஸ், க்ரேசியம், பஜாஜ் ஃபினான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, பாரதி ஏர்டெல், ஜெ.எஸ்.டபுள்யு., லார்சன், ஹேச்.டி.எஃப்.சி.,பிரிட்டானியா, டிவிஸ் லேப்ஸ், அதானி எண்டபிரைசிஸ்ம் டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 82.95 ஆக உள்ளது. PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்த நிலையில்வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதன் பங்குகள் 20% கடும் சரிவடைந்துள்ளது.


நண்பகல் 12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ்10 புள்ளிகளும் நிஃப்டி 3 புள்ளிகளும் சரிவை சந்தித்தது. 




மேலும் வாசிக்க..Budget 2024 LIVE: விவசாயம் முதல் ரயில்வே வரை.. மத்திய இடைக்கால பட்ஜெட் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன்..!