Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை
Budget 2024 LIVE Updates: 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள் உடனுக்குடன்.
வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Metro Rail Extension : பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றப்படும். - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை
HPV vaccine for 9 to 14 : கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
“ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;
கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது”
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Women Empowerment - Budget 2024 LIVE : மகளிர் இட இதுக்கீடு, முத்தலாக் போன்ற சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. - நிர்மலா சீதாராமன் பேச்சு
Budget 2024 LIVE : நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 7 ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்த நிலையில்வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பங்குகள் 20% கடும் சரிவடைந்துள்ளது.
PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்த நிலையில்வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பங்குகள் 20% கடும் சரிவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 270.27அல்லது 0.30 % புள்ளிகள் உயர்ந்து 72,016.54 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 57.70 அல்லது 0.26% உயர்ந்து 21,780.80 ஆக வர்த்தகமாகியது.
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேடிய கல்விக்கொள்கை நாட்டில் கல்வித்துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய நான்கு தரப்பினருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சு 2014ல் பொறுப்பேற்றது. இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க உழைத்து வருகிறோம். எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது - நிர்மலா சீதாராமன் உரை
”கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களால் நாடு பல்வேறு அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சரியாக 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஏறுமுகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை. காலை 9:15 மணி அளவில் தேசிய பங்குச்சந்தை 71,765 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இடைக்கால பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்திறங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்ற நோக்கி புறப்பட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
குடியரசு தலைவர் இல்லத்திற்கு கிளம்பிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகள், வெற்றிகளை எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேக்கு கடந்த பட்ஜெட்டை விட 25 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கலாம். கடந்த முறை ரூ.1.7 லட்சம் கோடியாக இருந்த ரயில்வேயின் பட்ஜெட், இம்முறை சுமார் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும். இது தவிர, புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் ரயில்வேக்கு சாத்தியம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தை அடைந்து, இங்கிருந்து பட்ஜெட் நகலை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து ராஷ்டிரபதி பவனுக்கு (குடியரசுத் தலைவர் இல்லம்) புறப்படுகிறார். இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால், இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது மோடி அரசின் 12வது பட்ஜெட் (இரண்டாவது இடைக்கால பட்ஜெட்) ஆகும். இந்த இடைக்கால பட்ஜெட்டில், 4 மாத செலவுகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தேர்தல் முடிந்து ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 8.15 மணிக்கு நிதியமைச்சகத்தை சென்றடைந்தார். இதைத் தொடர்ந்து, 8.40க்கு ராஷ்டிரபதி பவனுக்குச் செல்லும் அவர், 8.50க்கு பட்ஜெட் நகலுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கிறார்.
நிதியமைச்சர் 9.15 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தை சென்றடைந்த பின்னர், 10.15 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவையில் பட்ஜெட் முறைப்படி அங்கீகரிக்கப்படும். இதைத்தொடர்ந்து, காலை 11 மணிக்கு நிதியமைச்சர், பார்லிமென்ட் மேஜையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை துவக்குகிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டில் நாட்டின் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிடுகிறார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு வருடத்தில் 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக அல்லது 9000 ரூபாயாக கூட அதிகரிக்கலாம். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்கான தனி நிதியை திரும்பப் பெறுவது குறித்தும் நிதி அமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் இந்த பட்ஜெட்டை நேரலையில் நேரடியாக பார்க்கலாம். தூர்தர்ஷன், சன்சாத் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது தவிர, இது PIB இன் சமூக தளத்திலும், நிதி அமைச்சகத்தின் YouTube சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதுபோக, ஏபிபி நாடு பட்ஜெட் லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்துகொள்ளலாம். செய்திகள் வாயிலாகவும் முழு பட்ஜெட் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்ற தேர்தல் விரையில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று இடைக்காலபட்ஜெட் தாக்கல்; காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் இதுவாகும். இதற்கு முன் மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தொழில்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, நகைத் தொழிலாளா்களுக்கு கூலி நிர்ணயம், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நலத் திட்டங்கள், வா்த்தகா்களுக்கு வங்கிக்கடன் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இன்று நடைபெற உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்பூங்கா அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மின்சார வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு.
வருமான வரி விகிதங்கள் மாற்றியமைப்பு தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெண்கள், சாமானியர்களை கவரும் வகையிலான நிதியுதவி, மானிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்க வாய்ப்புள்ளது. கடந்த 621 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளது. அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.9,000 ஆக உயர்த்த திட்டம். உர மானியம், பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம்.
இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது மத்தியில் இருக்கும் பாஜக அரசால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் வருவாய்களை உள்ளடக்கிய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொகையை 6000 ரூபாயில் இருந்து 9000 ரூபாயாக உயர்த்தி அரசு அறிவிக்கலாம்.
நிலையான விலக்கு வரம்பை தற்போதைய ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தலாம். மேலும், புதிய வரி விதிப்பின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு தற்போது வருமான வரி செலுத்தப்படாது. இந்த வரம்பை ரூ.7.50 லட்சமாக அதிகரிக்கலாம்.
கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது
Background
Budget 2024 LIVE Updates:
ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட்(Interim Budget) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.
பிப்ரவரி 9ஆம் தேதி வரை, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக நேற்று முன்தினம் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
எதிர்பார்ப்பை கிளப்பிய இடைக்கால பட்ஜெட்:
பொதுவாக பட்ஜெட் என்றால் எந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்படும், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பது குறித்தும் பட்ஜெட்டில் சொல்லப்படும்.
ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், தினசரி செலவுக்கான நிதியை பயன்படுத்தவே அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.
நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் இன்றைய பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
விவசாயம்: அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்களில் பெரும்பகுதி உணவு மற்றும் உரத்துக்கும் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை பாதிக்காத வகையில் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களை குறிவைத்து மானியம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரயில்வே: இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு: 2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு 5-7 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்: இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் முன்னேற்றத்தைத் தடுக்க பல சவால்கள் இருக்கின்றன என்றும் அதை போக்க கவனம் தேவைப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பணிகள் மீதான வரி 18 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், மனையில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வரிகளை குறைக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -