Stock Market Update: மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்  1,053.10  அல்லது 1.47 % புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 333 அல்லது 1.54% சரிந்து 21,238.80 ஆக வர்த்தகமாகியது.


வர்த்தகம் சரிவு:


சோனி என்டர்டையின்மென்ட், Zee என்டர்டையின்மென்ட் நிறுவன இணைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்துள்ளது. HDFC வங்கியின் பங்குகள் சரிவு, சீன பங்குச்சந்தை சரிவு, சீனாவில் ரியல் எஸ்டேட் சரிவு உள்ளிட்டவைகளாலும் இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது. சீனா இந்த நிலையை சரிய முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்நிலையில், இந்த சூழல் இந்திய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


சிப்ளா, சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், டாக்டர். ரெட்டீஸ் லேப்ஸ்,அப்பல்லோ மருத்துவமனை, பவர்கிரிட் கார்ப், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


இந்தஸ்லேண்ட் வங்கி, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, எஸ்.பி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. லைப், பஜாஜ் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ்,அதானி போர்ட்ஸ், லார்சன், பிரிட்டானியா, டாடா மோட்டர்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ரிலையன்ஸ், விப்ரோ, க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, மாருதி சூசுகி, டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே, இன்ஃபோசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


ஃபார்மா தவிர மற்ற எல்லா துறைகளும் சரிவுடன் வர்த்தகமாகின. ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்தது. Mid and small caps  கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.15 ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 0.06% குறைந்துள்ளது. 


ப்ளூம்பெர்க்ஸ் அறிக்கையின்படி, ஜனவரி 22ம் தேதியன்று அன்று சந்தை மூலதனத்தின் மூலம் இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. செவ்வாயன்று இந்தியாவின் சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதேநேரம்,  ஹாங்காங்கின் பங்குச் சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ​​அமெரிக்கா 50.86 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையாக உள்ளது. அதைதொடர்ந்து, சீனா 8.44 டிரில்லியன் மற்றும் ஜப்பான் 6.36 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குச் சந்தை மதிப்பாக கொண்டுள்ளது.




மேலும் வாசிக்க..


Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 - எதிர்பார்ப்புகள் என்ன? வரி விதிப்பில் மாற்றமா? புதிய சலுகைகள் கிடைக்குமா?


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ 284 கோடியாக அதிகரிப்பு - நிர்வாக இயக்குநர் தகவல்