தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 547 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.




தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகரமதிப்பு (Net worth) ரூ.6,741 கோடியிலிருந்து ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.426 லிருந்து ரூ.484 ஆக உயர்ந்துள்ளது. நிகர இலாபம் ரூ.280 கோடியிலிருந்து ரூ.284 கோடியாக உயர்ந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) கடன் தொகை 89 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த வருமானம் ரூ.1173 கோடியிலிருந்து ரூ.1,387 கோடியாக உயர்ந்துள்ளது.




மொத்த வாராக் கடன் 1.70% இலிருந்து 1.69% ஆகக் குறைந்துள்ளது. SMA கணக்குகள், கடன் தொகையில் 841% இருந்து 5.34% ஆக குறைந்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 8.87% வளர்ச்சியடைந்து ரூ.85,185 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.46,799 கோடி மற்றும் கடன் தொகை ரூ.38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. வங்கியானது விவசாயம், சிறு குறு நடுத்தர நிறுவனக் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2023-24 மூன்றாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.25,636 கோடியில் இருந்து ரூ.28,725 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12.05% ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 75% என்ற விகிதத்தில் உள்ளது. விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.13,338 கோடியாக உள்ளது. விவசாயத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18% சதவிகிதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 34.75% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,870 கோடியில் இருந்து ரூ.13,064 கோடியாக உயர்ந்துள்ளது. CASA ஆனது, ரூ.12,851 கோடியில் இருந்து ரூ.1,014 கோடிகள் அதிகரித்து 31 டிசம்பர் 2023 இல் ரூ.13,865 கோடியாக உயர்ந்துள்ளது. வைப்புத்தொகை ரூ.43,440 கோடியில் இருந்து ரூ.46,799 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.34,802 கோடியிலிருந்து ரூ.38,386 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.30% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர இலாபம் ரூ.284 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.280 கோடியாக இருந்தது.) நிகரமதிப்பு (Net worth) ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.6,741 கோடியாக இருந்தது) இது ரூ.927 கோடி உயர்ந்து 13.75 % வளர்ச்சி அடைந்துள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது