Budget 2024 Income Tax Expectations: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு தாக்கல் செய்த,  பட்ஜெட்டில் வரி செலுத்துவருக்கான சலுகைகள் இடம்பெறாதது ஏமாற்றத்தை தந்துள்ளது.


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2024:


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் 2024 பல்வேறு சாத்தியமான சீர்திருத்தங்கள், குறிப்பாக வருமான வரித்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வருடாந்திர பட்ஜெட்டானது அரசாங்கத்தின் எதிர்வரும் நிதியாண்டிற்கான நிதித் திட்டங்களைக் வெளிக்காட்டும் ஒரு முக்கியமான கொள்கை ஆவணமாகும். அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை சற்றே விரிவாக அறியலாம்.


வரி விதிப்பு முறையில் மாற்றம் இல்லை..!


வரி விதிப்பு முறையில் மொத்தம் ஏழு அடுக்குகள் (Slabs) உள்ளன. அவற்றை ஒரு சாமானியர் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே,  எந்தவொரு பட்ஜெட்டிலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் ஒன்று வருமான வரி அடுக்குகளில் திருத்தம். சமீபத்திய ஆண்டுகளில் வரி செலுத்துவோர் தற்போதுள்ள அடுக்குகள், பணவீக்கம் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிடுவதற்கான திருத்தம் தேவை என கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான நிவாரணமாக வரி அடுக்குகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுள்ளது.


டிஜிட்டல் மாற்றம் மற்றும் வரி இணக்கம்:


நிதி அமைப்புகளின் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்து வருகிறது.  அதன் நீட்சியாக 2024 பட்ஜெட் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரி மதிப்பீட்டு செயல்முறையை சீரமைக்க மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு டூல்ஸ்களின் அறிமுகம் ஆகியவை எதிர்பார்க்கப்பட்டன. அந்த வகையில் அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும் தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலையான விவகாரங்களுக்கான ஊக்கத்தொகை:


காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய உலகளாவிய கவலைகள் அதிகரித்து வருவதால், தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஊக்குவிப்புகள் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் அதுதொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.


ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமை திட்டங்கள்:


ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இருக்கலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான வரிச் சலுகைகள், வரிக் கடன்கள் மூலம் மூலதனத்தை எளிதாக அணுகுதல் மற்றும் ஆரம்ப கட்ட தொடக்கங்களுக்கான நட்பு வரிச்சூழல் ஆகியவை எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், அதுதொடர்பாகவும் பட்ஜெட்டில் விரிவான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.


வரிசுமையை எளிதாக்குதல்:


வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் வரி செலுத்தும் முறை என்பது பெரும்பாலும் ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கலாம். 2024 வரவு செலவுத் திட்டம் வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்குவதற்கும், வரிச்சுமை கவலையை குறைப்பதற்குமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால், வெறும் 57 நிமிட நிர்மலா சீதாரமனின் பெட்ஜெட் உரையில், எந்த தகவலும் இல்லை. 


சொத்து வரி பரிசீலனைகள்:


உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சொத்து சமத்துவமின்மை பிரச்சினையை,  இந்தியா சொத்து வரி களத்தில் சாத்தியமான சீர்திருத்தங்கள் மூலம் தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்த இடைக்கால பட்ஜெட்டில் சொத்து வரி விகிதங்களைத் திருத்துதல், வரி விதிக்கக்கூடிய சொத்துக்களின் நோக்கத்தை விரிவுபடுத்துதல் அல்லது முற்போக்கான செல்வ வரிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.