Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 701.63 அல்லது 0.98 % புள்ளிகள் உயர்ந்து 72,038.43 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 213.40 அல்லது 1.00% உயர்ந்து 21,654.75 ஆக வர்த்தகமாகியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் 300 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 700 புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனை படைத்தது. சென்செக்ஸ் முதன் முறையாக 72 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது.
அல்ட்ராடெக் சிமெண்ட் நிஃப்டி பேக்கில் அதிக லாபம் ஈட்டியது. பங்கு 2.89 சதவீதம் உயர்ந்து ரூ.10,308 இல் வர்த்தகமானது. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எல்&டி மற்றும் எல்டிஐஎம்டிட்ரீ ஆகியவை 1.80 சதவீதம் வரை லாபம் ஈட்டியுள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டர்ஸ், ஜெ.எச்.டபுள்யூ ஸ்டீல், க்ரேசியம், பாரதி ஏர்டெல், ஈச்சர் மோட்டர்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, இந்தஸ்லேண்ட் வங்கி, எஸ்.பி.ஐ., லார்சன், எம்.அண்ட் எம்., இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர். ரெட்டி லேப்ஸ், ஹெச்.டி.எஃப். சி. வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஹெச்.சில்.எல். டெக்., ஹெச்.யூ.எல்., டைட்டன் கம்பெனி, கோடாக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ்., டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே, டி.சி.எஸ்.,சன் பார்மா, ரிலையன்ஸ், பவர்கிரிட் கார்ப், விப்ரோ, மாருதி சூசுகி, ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
என்.டி.பி.சி., ஓனென்.ஜி.சி. அதானி எண்டர்பிரைசர்ஸ், சிப்ளா, அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
1801 பங்குகள் அதிக மதிப்புடனும் 1848 பங்குகள் சரிவுடனும் 124 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகியது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் குறைந்து 83.35 ஆக உள்ளது.
மேலும் வாசிக்க..