கணுக்கால் காயம்:



அண்மையில் இந்தியாவில் 13-வது சர்வதேச உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது, இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்பாரா விதமாக ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.  


பின்னர், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அதில்,பெரிய அளவில் காயம் இல்லை எனவும் அதேநேரம் ஓய்வு தேவை என்றும் கூறப்பட்டது. இதனால், எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு வீரரான முகமது ஷமி விளையாடினார். அந்த உலகக் கோப்பை தொடரில் முகமது ஷமி அசத்தியது தனிக்கதை. இதனிடையே, உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் , சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டி20 , போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.


கேப்டனான சூர்யகுமார்:


அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.அந்த தொடர் மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.


இச்சூழலில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார். ஒரு நாள் தொடருக்கு கே.எல்.ராகுலும், டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்பட்டனர். இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது. வரும் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.


ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகல்:


இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகும் வகையில், இந்த தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே சூர்யகுமார் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், அவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்குபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் ஐபிஎல் 2024 தொடரின் மும்பை இந்திய இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ள ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.


மேலும் படிக்க: Wrestler Vinesh Phogat : அன்புள்ள பிரதமரே 5 நிமிஷம் ஒதுக்குங்க... விருதுகளை திருப்பி அளிக்கும் வினேஷ் போகத்!


மேலும் படிக்க: KL Rahul Century: போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்.. சதம் அடித்து இந்தியாவை தனி வீரனாக தூக்கி நிறுத்திய கே.எல். ராகுல்