Thillu Mullu Chandrasekaran: ரஜினியுடன் தில்லுமுல்லு படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரம்.. நடிகர் சந்திரசேகரன் மறைவு!

Thillu Mullu Chandrasekaran: ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த மாஸ்டர் சந்திரசேகரன் உயிரிழந்துள்ளார். 

Continues below advertisement
Thillu Mullu Chandrasekaran:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படத்தில் காமெடி கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய மாஸ்டர் சந்திரசேகரன் உயிரிழந்தார். 
 
கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் பேசபப்ட்ட மாஸ்டர் சந்திரசேகரன், அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஒருமாதமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது நடிகர் ரஜினியை பார்க்க வேண்டும் என்பது மாஸ்டர் சந்திரசேகரனின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், தற்போது அவர் இறந்து விட்டதாக சந்திரசேகரனின் மகன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்களில் டாப் 10 லிஸ்டில், ரஜினி நடித்த படம் தான் தில்லு முல்லு கண்டிப்பாக இடம் உண்டு. 1981 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி மாறுபட்ட வித்தியாசமான காமெடி ரோலில் நடித்து தமிழ் சினிமாவின் எவர்கிரீBigg Boss 7 Tamil: நிக்சனை டார்கெட் செய்த தினேஷ்.. டிக்கெட் டு ஃபினாலேவில் பதட்டம்.. கவலையில் ரவீனா!ன் மூவியாக இருக்கும் தில்லு முல்லு படம். தேங்காய் சீனிவாசன், ரஜினி காம்பினேஷனில் உருவான இந்த படம் இன்றும் காமெடியில் ரசிகர்கள் விரும்பும் எவர்கிரீன் படமாக தில்லுமுல்லு உள்ளது. அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்/இந்திரன் இந்தப் பெயரையும், மீசையையும் வைத்துக் கொண்டு ரஜினி செய்யும் தில்லு முல்லு சம்பங்களும், அதை தேங்காய் சீனிவாசனிடம் மறைக்க முயல்வதும் திரையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

அப்படி ரஜினி தில்லுமுல்லு செய்யும் போது, அதை கண்டிப்பிடிக்கும் சைல்டு கேரக்டரில் மாஸ்டர் சந்திரசேகர் நடித்திருப்பார். ரஜினியின் தில்லுமுல்லுவை மாஸ்டர் சந்திரசேகர் தெரிந்து கொண்டு ரஜினியை மிரட்டி பணம் கேட்பார். தில்லுமுல்லு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமான மாஸ்டர் சந்திரசேகர், கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்துள்ளதாக மாஸ்டர் சந்திரசேகர் மகன் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், மாஸ்டர் சந்திரசேகருக்கு ரஜினியை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், ஆனால், கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை என்றும் வருத்தப்பட்டுள்ளார். 

இதற்கிடையே ஊடகம் ஒன்றில் நேர்க்காணலில் பேசிய சந்திரசேகர், தில்லுமுல்லு படத்தில் நடிக்கும்போது ரஜினி தான் அவரது ஸ்டைலை தனதுக்கு கற்றுக் கொடுத்ததாக கூறியிருந்தார். 

மேலும் படிக்க: Vetrimaran on Aadukalam Kishore: சினிமாவில் நான் பார்த்த ஒரு கம்யூனிஸ்ட்.. “ஆடுகளம்” கிஷோர் பற்றி வெற்றிமாறன்!

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola