இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் குறிப்பாக 400 புள்ளிகள் குறைந்துள்ளன. இன்று சென்செக்ச் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியுள்ளது. மேலும் நிஃப்டி 17,750 புள்ளிகள் குறைந்துள்ளது. 


இவை தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 80 ஆக உள்ளது. பங்குச்சந்தையில் பல்வேறு முக்கிய துறைகளின் பங்குகள் இன்று சரிந்துள்ளன. இதன்காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.


 






எந்தெந்த பங்குகள் குறைந்துள்ளது?


இன்று பங்குச்சந்தையில் டாட்டா மோட்டர்ஸ், மஹிந்திரா, மாருதி சுசுகி உள்ளிட்ட ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இவை தவிர ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி உள்ளிட்ட வங்கி துறைகளின் பங்குகளின் மதிப்பும் இன்று குறைந்துள்ளன. அதேபோல் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற ஐடி துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு இன்று குறைந்துள்ளன.




மேலும் படிக்க:ஆப், இன்டர்நெட் வேண்டாம்! ஆதார் வைத்து எளிதில் பேங்க் பேலன்ஸ் அறியலாம்! எப்படி?




டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு:


சீனாவின் யூவான் மதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஆசிய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ஆசிய பணங்களின் மதிப்பும் குறைந்து வருகின்றன. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் நிலவு வரும் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி காரணமாக அங்குப் பங்குச்சந்தை நிலவரம் நன்றாக உள்ளது. 


 






வல்லுநர்களின் கருத்து:


உலகத்தில் நிலவிவரும் பொருளாதார சூழல் ஆமற்றும் முதலீட்டு சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார நிலை மற்றும் குறையும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். 




மேலும் படிக்க: ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க இன்னைக்கு நடையைக் கட்டலாம்.. இதுதான் விலை நிலவரம்..