இந்திய குடிமக்கள் தற்போது தங்கள் வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதார் மூலம் வங்கி இருப்பை கண்டறிவது


இந்திய குடிமகன்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் வங்கிக் கணக்குகளின் இருப்பை, கிளைக்குச் செல்லும் சிரமமின்றி ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆதார் எண்களைப் பயன்படுத்தி இருப்பை பார்ப்பதன் மூலம், வங்கியின் இணையதளத்திற்கோ, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆப்பிற்கோ சொல்லாமலேயே பேலன்ஸ் பார்க்கமுடிகிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய வசதியை தேவை இல்லையாம். நேரடியாக சாதாரண பட்டன் செல்போனில்கூட தெரிந்துகொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.



ஆதார் மூலம் வங்கி இருப்பை அறியும் முறை



  • முதலில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

  • பின்னர், வங்கிக் கணக்கை உங்கள் எண்ணுடன் இணைக்க 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

  • உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.

  • திரையில் வங்கி இருப்புடன் UIDAI இலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெறுவீர்கள்.

  • அதில் நீங்கள் வங்கியில் உள்ள உங்கள் கணக்கின் இருப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.



 


 > > AK 63 லேட்டஸ்ட் அப்டேட்... ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி... இதுவும் 'வி'யில் துவங்கி 'எம்'இல் முடியும் டைட்டில்தான்!


ஆதார் அட்டையை இணைப்பதன் பயன்கள்


இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை ஒரு முக்கியமான கருவியாக மாறி உள்ளது. இது மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும் போது பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற வழிவகை செய்கிறது. ஆதார் கார்டை மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் இணைத்தால் எல்லாம் ஒருங்கிணைக்க படுகிறது. அதன்மூலம் மேலும் பல அரசாங்க திட்டங்களைப் பெறவும், அறிந்துகொள்ளவும் வழிவகை செய்கிறது. இந்த வசதியால், ஒவ்வொரு முறையும் வங்கிக்குச் செல்ல முடியாதவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வங்கியில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்று சரிபார்க்க வங்கிக்குச் செல்ல வேண்டிய தேவையை முற்றிலும் நீக்குகிறது. மேலும் இதற்கு இன்டர்நெட் தேவை இல்லை என்பதால், ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடுயும் என்பது இல்லாமல், எல்லோரும் இதனால் பயன் பெற முடிகிறது. இதன் மூலம் மொபைல் ஆப் மூலம், பிரைவேட் ஆப்களான கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகியவை இல்லாமலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.