Samantha father emotional post : விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை உணர்ச்சிகரமான பதிவு...


தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான நடிகை சமந்தா - டோலிவுட்டின் முன்னணி ஹீரோ நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இருவரும் தங்களின் பிரிவை பற்றி பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது சமந்தாவின் தந்தை சமூக வலைத்தளத்தில் தனது மனவருத்தத்தை வரிகளாக பதிவிட்டுள்ளார்.  


திருமண பந்தத்தில் இருந்து பிரிவு :


சமந்தா - நாக சைதன்யா இருவருக்கும் 2017ம் ஆண்டு திருமணம்  நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மிகவும் அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்த இருவரும் 2021ல் விவாகரத்து பெறப்போவதாக மனுதாக்கல் செய்தனர். பொது இடங்களில் இருவரின் பிரிவு குறித்து அதிகம் பேசுவதை தவிர்த்து வந்தனர். அவர்கள் இருவரின் பிரிவை குறித்து அடிக்கடி பல செய்திகள் மற்றும் வதந்திகள் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தன. இது போன்ற வதந்திகளுக்கு நாங்கள் இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளோம் இது குறித்து மேலும் யாரும் பேசவேண்டாம் என கேட்டு கொண்டனர். 


 



 


சமந்தா தந்தையின் பதிவு:


அந்த வகையில் தற்போது சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தற்போது சமந்தா - நாக சைதன்யா திருமண புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு  "நீண்ட காலத்திற்கு முன்னர் ஒரு கதை இருந்தது ஆனால் அது இனி இல்லை... எனவே புதிய கதையை தொடங்குவோம் மற்றும் ஒரு புதிய அத்தியாயம்". மேலும் கமெண்ட் செக்ஷனில் "உங்கள் அனைவரின் உணர்வுகளுக்கு நன்றி. ஏன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் ஆனால் துக்கப்பட்டு உட்காருவதற்கு இந்த  வாழ்க்கை மிகவும் குறுகியது" என தனது வேதனையை பகிர்ந்துள்ளார். 


 



திரைவாழ்வில் ரொம்ப பிஸி :
 
வாழ்க்கையில் ஒரு சறுக்கல் ஏற்பட்டாலும் சமந்தா தனது திரை வாழ்க்கையில் மிகவும் பிஸியாகவே வலம் வருகிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் "யசோதா" படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார். மேலும் இயக்குனர் பில்ப் ஜான் இயக்கும் சர்வதேச திரைப்படமான 'சகுந்தலம்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் சமந்தா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என கூறப்படுகிறது. 


 






 


சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.