உலகளவில் விலைவாசி உயர்வு இருந்து வரும் நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், இந்திய பங்கு சந்தைகள் கடந்த வாரம் சரிவை சந்தித்தன. ஆனால், பண்டிகை கால வருகையையொட்டி, வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்கு சந்தை ஏற்றுத்துடன் காணப்பட்டது. ஆனால் மீண்டும் இன்று பங்குச்சந்தை சரிவுடம் தொடங்கியுள்ளது.






 இந்நிலையில், இன்று காலை தொடங்கி பங்குச்சந்தையில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 393.68 புள்ளிகள் உயர்ந்து 61,412.51 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 123.1 புள்ளிகள் உயர்ந்து 18,297.35 புள்ளிகளாக உள்ளது.


லாபம் - நஷ்டம்


ஹின்டல்கோ, லார்சன், டெக் மகேந்திரா, எச்சிஎல் டெக், எஸ்பிஐ லைப், டாடா ஸ்டீல்,  அப்போலோ மருத்துவமனை, இன்போசிஸ், எம்எம், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பையின்ட்ஸ், பவர்கிரிட் கார்ப், பாரதி ஏர்டெல், விப்ரோ, ரிலையன்ஸ், மாருதி சுசிகி, அதாணி போர்ட்ஸ், நெஸ்டீலே, கோல் இந்தியா, கிராசிம், டாடா கான்ஸ், பிரிட்டானியா, என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி லைப், ஓஎன்ஜிசி, டெட்டன் கம்பெணி, ஐசிஐசிஐ வங்கி, ஹிரோ மோட்டாகோர்ப், ஐடிசி, சன்பார்மா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


அல்ட்ரா டெக் சிமெண்ட், அதாணி எட்டர்பிரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகுள் ஏற்றம் கண்டுள்ளன.


ரூபாய் மதிப்பு: 






உலக அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை இந்திய பங்குச்சந்தைகளை பாதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 11 காசுகள் குறைந்து 82.73 ரூபாயாக ஆக உள்ளது. 




மேலும் படிக்க


GST Council Meeting: பருப்பு உமிகளுக்கு ஜி.எஸ்.டி. பூஜ்ஜியமாக குறைப்பு; எந்த பொருட்களுக்கும் வரி உயர்வு கிடையாது - நிர்மலா சீதாராமன்