வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் 10 கோடி பார்வையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது. 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 


தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. முன்னதாக ‘வாரிசு’ திரைப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான பாடல் ’ரஞ்சிதமே’. தமன் இசையில் விஜய், மானசி குரல்களில் சென்ற நவம்பர் 5ஆம் தேதி வெளியாகி பட்டி  தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.


தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய இந்தப் பாடல் யூடியூபில் பார்வையாளர்களை அள்ளி மெகா ஹிட் அடித்தது.


இந்நிலையில், தற்போது ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்கள் அதாவது 10 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தான் இப்பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்தது.


 






இந்நிலையில் தற்போது வெகு குறுகிய காலத்துக்குள் 100 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ’ரஞ்சிதமே’ பாடல் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது.


வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.  இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.