மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலகத்தில் இருந்து ஆன்லைன் வழியாக பங்கேற்றார்.


இக்கூட்டத்தின் முடிவில், மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தெரிவித்தார்.





  • எந்த பொருட்களுக்கும், வரி உயர்வு குறித்தான முடிவு எடுக்கவில்லை.

  • பருப்பு வகைகள்( பருப்பு உமிகள்) மீதான வரி விகிதம் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

  • பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான 18.5% வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது.




  • சரக்குகள் அல்லது சேவைகளை அல்லது இரண்டையும் வழங்காமல் ரசீது மட்டும் வழங்கிய குற்றம் தவிர மற்றவற்றில் ஜிஎஸ்டியின் கீழ் வழக்கு தொடர்வதற்கான தொகையின் அளவு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்படுகிறது. 



  • புகையிலை மற்றும் குட்கா மீதான வரிவிதிப்பு குறித்து விவாதிக்க முடியவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.




  • ஜிஎஸ்டியில்  பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இல்லை. எனவே  இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கௌன்சில் பரிந்துரை செய்துள்ளது.








Also Read: இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கு பயனாளர்கள் பணம் செலுத்த தவறிய மூன்று நாட்களுக்குப் பிறகு தாமதமாக அபராதம் விதிக்கலாம் எனக் கூறியுள்ளது