Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.  


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 143.66% அல்லது 0.24 % புள்ளிகள் அதிகரித்து  59,832.97 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 42.10 % அல்லது 0.24% புள்ளிகள் உயர்ந்து 17,599.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.  


இன்றைய காலை வர்த்தக நேர தொடக்கத்தில், சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.


காலை நேர நிலவரம்: 


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 117.59 அல்லது 0.20% புள்ளிகள் குறைந்து 59,572.59 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 32.15 அல்லது 0.18% புள்ளிகள் குறைந்து 17,524.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. இந்த வாரம் முழுவதுமே இந்திய பங்குச்சந்தையானது மந்தமாகவே காணப்பட்டது. அதன்படி இன்றைய வர்த்தக தொடக்கத்திலும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவடைந்தது.


லாபம்-


அதானி எண்டர்பிரைசர்ஸ், பஜார்ஜ் பினான்ஸ், டாடா மோட்டர்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், சன் பார்மா, இந்தஸ்லேண்ட் வங்கி, எம்&எம், ஹெச்.டி.எஃப்.சி. லைவ், ஈச்சர் மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., மாருது சுசூகி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், க்ரேசியம், பாரதி ஏர்டெல், கோடாக் மஹிந்திரா, பஜார் ஆட்டோ, ஐ.டி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டம்:


ஹெச்.சி.எல். டெக், ஓ.என்.ஜி.சி., ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.சி.ஐ. வங்கி,டெக் மஹிந்திரா, டைடன் கம்பெனி, விப்ரோ, டி.சி.எஸ்., கோல் இந்தியா, நெஸ்லே, டாடா ஸ்டீல்,சிப்ளா, என்.டி.பி.சி., பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.


இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் கூட்டத்தின் முடிவுகளை குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள்  வீழ்ச்சியுடனேயே தொடங்கின. ரெப்போ வட்டி விகித்தில் மாற்றம் இல்லை என்றும் 6.5 சதவீதமாகவே தொடரும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் மதிப்பு லாபத்தில் வர்த்தகமாகின. ஏற்றத்துடதே, இந்திய பங்குச்சந்தைகள் முடிவடைந்தன. 




மேலும் வாசிக்க..


EXCLUSIVE: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஊரடங்கு வருமா?- பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி


இதையும் படிங்களேன்.


கொரோனா அச்சம்...தயார்நிலையில் உள்ளோமா? மாநில அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபடும் மத்திய அரசு..