கடந்த வாரத்தில் சரிவில் காணப்பட்ட பங்கு சந்தை சற்று மீண்டு ஏற்றத்தில் காணப்படுகிறது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்ந்து, 58,074.68 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 119.10 புள்ளிகள் உயர்ந்து 17,107.50 புள்ளிகளில் வர்த்தகமானது.
இன்று காலை தொடக்கத்தில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 221.31 அல்லது 0.34% புள்ளிகள் உயர்ந்து 58,822.28 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 62.25 அல்லது 0.37 % புள்ளிகள் உயர்ந்து 17,050.65 புள்ளிகளாகவும் இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் பங்கு சந்தையில் ஏற்றம் கண்டன.
ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெற்றன.
பவர் கிரிட், ஹெச்யுஎல், பிரிட்டானியா, டெக்எம் மற்றும் திவி லேப் ஆகியவை தலா ஒரு சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தன.
வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
சர்வதேச தாக்கம்:
பெடரல் வங்கியானது, புதன்கிழமை வட்டி விகித உயர்வை மேற்கொள்ளும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 0.5 புள்ளிகளிலிருந்து 0.25 சதவீத புள்ளிகளாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்நிலையில், முதலீட்டாளர்கள் பலரும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்புக்கு காத்துள்ளனர்.
உலகளாவிய வங்கிகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், வட்டி விகித உயர்வு குறித்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவு வெளியாகவுள்ள நிலையில், ஆசிய சந்தைகள் செவ்வாய்க்கிழமை உயர்ந்து காணப்படுகின்றன.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிந்து ரூ.82.66-ஆக உள்ளது.
Also Read: TN Budget 2023: தமிழ்நாட்டிற்கு எவ்வளவு வருவாய்? எவ்வளவு செலவு? எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா?