உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்ததையடுத்து, தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 55.30 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 618 புள்ளிகளாக உள்ளது. மேலும், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 177.04 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 681.84 புள்ளிகளாக உள்ளது.
லாபம் நஷ்டம்:
ஆக்சிஸ் வங்கி, பிரிட்டாணியா, சிப்லா, ஹிண்டல்கோ, இன்ஃபொசிஸ், நெஸ்ட்லே,ரிலையன்ஸ், சன் பார்மா, டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏற்றத்துடன் காணப்படுகின்றன
விப்ரோ, யுபிஎல், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ,பவர் கிரிட், கோடாக் மகேந்திரா, கோல் இந்தியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
சீனாவில் ரியஸ் எஸ்டேட் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆசிய சந்தைகள் பெரும் ஏற்றம் கணடது. மேலும் அமெரிக்காவில் பணவீக்கம் சற்று தளர்ந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தாது என்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடும் சற்று அதிகரித்தது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாதகமான சூழ்நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீடுகளும் சற்று அதிகரித்தது.
ரூபாயின் மதிப்பு:
சீனாவில், கொரோனா தொற்று காரணமாக, ஜீரோ கோவிட் திட்டம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இதனால் கச்சா எண்ணேய் விலை குறைந்தது. இதன் காரணமாக டால்ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 3 காசுகள் குறைந்து 81.71 ரூபாயாக ஆக உள்ளது.