சில்லறை பரிவர்த்தணைக்கான டிஜிட்டல் ரூபாயை, டிசம்பர் 1ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே, டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி அறிவிப்பின் மூலம், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100,ரூ.500, ரூ.2,000 -க்கு டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வர உள்ளது.






 


டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம்


கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயத்தை அரசே வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சில்லறை பரிவர்த்தணைக்கான டிஜிட்டல் நாணயம் டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.


மக்களவையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.






டிஜிட்டல் நாணயம்:


டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் வெவ்வேறு. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், இந்த டிஜிட்டல் நாணயம் வெளியாக உள்ளது. இது மத்திய வங்கியால் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பணமாகும். இந்த டிஜிட்டல் நாணயம் காகிதத்தில் அச்சிடப்படும் பணத்தைப் போன்றதுதான். அதே மதிப்பு கொண்டது. 


அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாக இருக்கும். அரசு அச்சடிக்கும் பணத்துடன் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் வடிவில் இருப்பது மட்டுமே ஒரே வித்தியாசமாகும். 


முதல்கட்டமாக, சில நாட்களுக்கு மும்பு மொத்த விற்பனையில் டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது  சில்லறை பரிவர்த்தணைக்கான டிஜிட்டல் ரூபாயை, டிசம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.


Also Read: ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வின்போது நமது குடும்பத்தை பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பதற்காக உதவுவதுதான் ஆயுள் காப்பீட்டு திட்டம்.