இன்றைய நாள் முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 211.16 புள்ளிகள் அதிகரித்து 62,504.80 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, மேலும் 50 புள்ளிகள் அதிகரித்து 18,562.75 புள்ளிகளாக உள்ளது. 






இன்று மதியம், தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 18 ஆயிரத்து 600 புள்ளிகளை தாண்டியது. 


லாபம் - நஷ்டம்


டாடா மோட்டார்ஸ், யுபிஎல்,  பிபிசிஎல், விப்ரோ, லார்சன், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் பின்சர்வு, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டாடா  ஸ்டீல், மாருதி சுசிகி, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, எச்சிஎல் டெக்,எம்&எம், எச்டிஎஃப்சி, அதானி எட்டர்பிரிஸ், அப்போலோ மருத்துவமனை, ஓஎன்ஜிசி பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ்,  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.



ரூபாயின் மதிப்பு:


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.  மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 5 காசுகள் அதிகரித்து 81.66 ரூபாயாக ஆக உள்ளது.


Also Read: Train Cancelled List: டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு? - போராட்டத்தால் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்!


Also Read: சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கொல்லத்திற்கு டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.