கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாக இந்திய பங்கு சந்தை ஏற்றத்தை சந்தித்துள்ளது.
பங்கு சந்தைன் நிலவரம்:
தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 18 ஆயிரத்து 600 புள்ளிகளை தாண்டியது. இந்த உயர்வானது வரலாறு காணாத வகையில் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும். மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 600 புள்ளிகளை தாண்டியது.
லாபம்- நஷ்டம்:
50 நிறுவன பங்குகளான நிஃப்டி50 இல், 28 பங்குகள் ஏற்றத்திலும், 22 பங்குகள் சரிந்தும் காணப்படுகிறது.
பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
இன்றைய நாள் முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 211.16 புள்ளிகள் அதிகரித்து 62,504.80 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, மேலும் 50 புள்ளிகள் அதிகரித்து 18,562.75 புள்ளிகளாக உள்ளது.
இன்று மதியம், தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 18 ஆயிரத்து 600 புள்ளிகளை தாண்டியது.
ரூபாயின் மதிப்பு:
மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 5 காசுகள் அதிகரித்து 81.66 ரூபாயாக ஆக உள்ளது.