பங்கு சந்தை நிலவரம்:


உள்நாட்டு முதலீடுகள் சற்று அதிகரித்த நிலையில், இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 54.15 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 800 புள்ளிகளை தாண்டியது. . மேலும் மும்பை பங்கு  சந்தை குறியீடான சென்செக்ஸ் 184.54 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 200 புள்ளிகளை தாண்டியது.






ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்றங்கள் இறங்கள் காணப்பட்டாலும், இந்திய பங்கு சந்தை, இந்த வாரங்கள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்படுகிறது. அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளின் அதிகரிப்பால், இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


லாபம்- நஷ்டம்:


அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டாணியா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், லார்சன், எஸ்.பி.ஐ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.


ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட், ரிலையன்ஸ், டாடா மோடார்ஸ், டைட்டான் நிறுவனம் உ, கோல் இந்தியா, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணாப்படுகின்றன.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.  மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.


ரூபாயின் மதிப்பு:





இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 81.21 ரூபாயாக ஆக உள்ளது.


Also Read: GST Collection Nov 2022: நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 11% உயர்வு - எதனால் அதிகரிப்பு..?