காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பர்  உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கு மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது. 


ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு


ஜல்லிக்கட்டை தொடர்ந்து அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.