2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வசூலானது 1 லட்சத்து 45 ஆயிரத்து 867 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மறைமுக வரியான, ஜி.எஸ்.டி வரியானது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டுக்கான நவம்பர் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு:
இதில், மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.25, ஆயிரத்து 681 கோடிகோடி ரூபாயாக உள்ளதாகவும், மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.32, ஆயிரத்து 651 கோடியாக உள்ளதாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது 77 ஆயிரத்து 103 கோடி ரூபாயாக உள்ளதாகவும் மத்திய நிதி துறை அமைச்சகம் அறிககையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், செஸ் மூலம் 817 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில், பொருட்களின் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய்கள் 20% அதிகமாகவும், உள்நாட்டு கொடுக்கல்- வாங்கல் (சேவைகளின் இறக்குமதி உட்பட) மூலம் கிடைக்கும் வருவாய்கள் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்து வருவாயை விட 8% அதிகமாகவும் இருந்ததன் காரணத்தால் ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்தது.
தமிழ்நாடு:
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாதத்தில், 21 ஆயிரத்து 611 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் 8 ஆயிரத்து 551 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 7 ஆயிரத்து 795 கோடி ரூபாய் வசூலாகிய்இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி வசூலானது 1 லட்சத்து 31 ஆயிரத்து 526 கோடியாக இருந்தது. ஆனால், இந்த வருட நவம்பர் மாதத்தில், கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read: Share Market: ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை.. ஏற்றத்தில் ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ்...
Also Read: Gold, Silver Price Today : கடைசி மாதத்தின் முதல்நாள்..! தங்கம் விலை ஏற்றமா..? இறக்கமா..?