உலகளவில் விலைவாசி உயர்வு இருந்து வரும் நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், பண்டிகை கால வருகையையொட்டி, இந்திய பங்கு சந்தைகள் சற்றுத்துடன் காணப்படுகின்றன. 


இந்நிலையில் இன்றைய பங்குச் சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 468.38 புள்ளிகள் அதிகரித்து 61,806.19 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  151.45 புள்ளிகள் அதிகரித்து 18,420.45 புள்ளிகளில் வர்த்தகமானது.




லாபம் - நஷ்டம்:


நிஃப்டி – 50ல் உள்ள 50 நிறுவனங்களில், 41 நிறுவனங்கள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 9 நிறுவனங்கள் சரிவுடன் முடிவடைந்தன.


ஓஎன்ஜிசி, சன் பார்மா, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், யுபிஎல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் முடிவடைந்தன.


அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபினான்ஸ், ஏர்டெல், பிரிட்டானியா, சிப்லா, கோல் இந்தியா, நெஸ்ட்லே, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 127.48 புள்ளிகள் உயர்ந்து 61,465.29 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 37.85 புள்ளிகள் உயர்ந்து 18,306.85 புள்ளிகளாக இருந்தது.


தாக்கம்:


சீனாவில் கொரோனா தொற்றுக்கான தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய்க்கான தேவை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உயரும் சூழல் நிலவுகிறது. 


இந்நிலையில் டாலருக்கு எதிரான இதர நாணயங்களின் மதிப்பு உயரும் தன்மை காணப்படுகிறது. டாலர் ரூபாய் மதிப்பானது இந்திய பங்கு சந்தையை கனிசமாக பாதித்தாலும், பண்டிகை காலத்தையொட்டி, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 




அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 6 காசுகள் அதிகரித்து 82.69 ரூபாயாக ஆக உள்ளது. 


Also Read: GST Council Meeting: பருப்பு உமிகளுக்கு ஜி.எஸ்.டி. பூஜ்ஜியமாக குறைப்பு; எந்த பொருட்களுக்கும் வரி உயர்வு கிடையாது - நிர்மலா சீதாராமன்


Also Read: Gold, Silver Price Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...! இன்னைக்கு கடைக்கு போகலாமா..? வேண்டாமா..?