மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 208.24 புள்ளிகள் சரிந்து 62,626 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 58.30 புள்ளிகள் சரிந்து 18,642.75 புள்ளிகளாக உள்ளது. 


உலகளவில் பணவீக்கம் நிலவி வரும் சூழ்நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என் கணிக்கப்படுகிறது. 






மேலும், நாளையுடன் முடியவுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்தான அறிவிப்பு வெளியாகும். இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வகிதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்குமாறு வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


லாபம்- நஷ்டம்:


அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டாணியா, நெஸ்ட்லே, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. 


ஏர்டெல், சிப்லா, இன்ஃபோசிஸ்,டிசிஎஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.


ரூபாயின் மதிப்பு:





இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 8 காசுகள் அதிகரித்து 81.25 ரூபாயாக ஆக உள்ளது. 


Also Read: இறைச்சி...பால் பொருட்களின் விலை.. ஐநா வெளியிட்ட அறிக்கை...புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?