Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 371.83 அல்லது 0.60 % புள்ளிகள் உயர்ந்து 61,560. 64 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 104.75 அல்லது 0.57% புள்ளிகள் சரிந்து 18,181.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்
ஹுரோ மோட்டர்கார்ஃப், இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி., யு,பி.எல்.பி.பி.சி.எல்., பாரதி ஏர்டெல், அதானி எண்டர்பிரைசர்ஸ், பிரிட்டானியா, மாருதி சுசூகி, கோல் இந்தியா, சிப்ளா, ஹெச்,டி.எஃப்.சி., எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
சரிவுடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்
கோடாக் மஹிந்திரா, அப்பலோ மருத்துவமனை, எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்., ஏசியன் பெயிண்டஸ், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபிள்யு, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பஜார்ஜ் ஃபின்சர்வ், பவர்கிர்ட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின,
காலை நிலவரம்:
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 245.97 அல்லது 0.40 % புள்ளிகள் குறைந்து 61,686.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 66.50 அல்லது 0.36% புள்ளிகள் குறைந்து 18,220.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் இரண்டவது நாளாக இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க..
National Dengue Day: டெங்கு போன்ற கொடிய நோயை பரப்பும் கொசுக்கள்… இயற்கை முறையில் விரட்டுவது எப்படி?