இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே முதல்முறைாயக டாலருக்கு எதிராக 80ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. தொடரந்து 8-வது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்


இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூ.79.98 என்று தொடங்கிய நிலைியல் அடுத்த சில நிமிடங்களில் 7 பைசா சரிந்து ரூ.80.05 ஆக மாறியது.



என்ன காரணம்?


அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி வீதத்தை உயர்த்தப் போகிறது என்ற தகவலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும்தான் ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கியக் காரணமாகும் என்று கூறப்படுகிறது. விலை ஏறிக்கொண்டே செல்லும் நிலையில், சவுதி அரேபியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது எனத் தெரிவித்து விட்டது. நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Crime: போதையில் மாறுது பாதை… இளைஞரை கொடூரமாக கொன்ற சிறுவன்... தஞ்சையில் கொடூரம்


நிதிக்கொள்கை கூட்டம் காரணமா?


வரும் 26 மற்றும் 27ம் தேதி நடக்க இருக்கும் பெடரல் வங்கியில் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி 100 புள்ளிகள் வரை உயர்த்தும் எனத் தெரிகிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து அச்சத்தில், முதலீட்டாளர்கள் முதலீ்ட்டை திரும்பப் பெறுகிறார்கள், எனவே டாலர் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்பு சரிகிறது. 



மேலும் குறையுமா?


வர்த்தகப் பற்றாக்குறை, அந்நிய முதலீடு வெளியேற்றம், பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்டில் நெருக்கடி ஆகியவை காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்து வரும்போது, டாலர் மதிப்பு வலுவடைவது மேலும் ரூபாய் மதிப்பை பலவீனமாக்கும். இது அனைத்தும் மென்மேலும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் அதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் மென்மேலும் சரிய வாய்புள்ளதென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 


வரலாறு காணாத சரிவு!


திங்கள்கிழமை வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு மொத்தமாக 80 ரூபாய்க்கு கீழ் வீழ்ச்சி அடையாமல் சற்று உயர்ந்து ரூ.78.98 பைசாவில் முடிந்தது. ஆனால், வர்த்தகத்தின் இடையில் 80 ரூபாயை தொட்டுவிட்டு பின்னர் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று காலை மீண்டும் வர்த்தகம் தொடங்கியதும், ரூ.80க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்து 80.05 இல் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.