தருமபுரி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்தி அடுத்தடுத்து திருமணம் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த உப்பாரஹள்ளியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயாருடன் தனியாக வசித்து வந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மொட்டையன் என்பவரது மகனான விஜய் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயிடன் சென்று பெண் கேட்டுள்ளார். 


அதற்கு அவர் சிறுமிக்கு 16 வயது தான் ஆவதாகவும், 18 வயது பூர்த்தி அடைந்ததாகவும் பேசிக் கொள்ளலாம் என கூறி பெண் தர மறுத்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன் சிறுமியிடன் விஜய் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அச்சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்று விஜய் திருமணம் செய்துள்ளார். பின்னர் திருப்பூரில் இருவரும் குடும்பம் நடத்தி  வந்துள்ளனர். பின்னர் சில மாதங்களுக்கு முன் விஜய்யும் அச்சிறுமி சொந்த ஊருக்கு வந்தனர். உப்பாரஹள்ளியில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 


இதற்கிடையில் அச்சிறுமிக்கும், அவரது தாயாருடன் கூலி வேலை செய்து வந்த பூபது என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனிலும், நேரிலும் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த விஜய் சிறுமியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி  உப்பாரஹள்ளிக்கு வந்த பூபதி சிறுமியை ஓசூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள முருகன் கோயில் ஒன்றில் வைத்து சிறுமிக்கு விஜய் கட்டிய தாலியை கழற்றி உண்டியலில் போட்டி விட்டு பூபதி புதிதாக தாலி கட்டியுள்ளார். 


பின்னர் இருவரும் ஓசூரில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இதுபற்றி தகவலறிந்த விஜய், தனது மனைவியை பூபதி கடத்தி திருமணம் செய்ததாக மாரண்டஹள்ளி போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி மற்றும் பூபதியை ஓசூரில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு நடந்த 2 திருமணமும் 18 வயதுக்கு முன்னர் நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியிடம் புகார் மனு பெறப்பட்டு குழந்தை திருமணம் மற்றும் போக்சோவில் விஜய், பூபதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண