இளம் சிறார்கள் போதை பழக்கத்தினால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இப்போது போதையுடன் ஆயுத கலாச்சாரமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதையில் தங்களை ரவுடிகளாகவே நினைத்து கொண்டு செய்யும் சம்பவங்கள் சிறைக்குள் தள்ளும் அளவிற்கு நடந்து வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தஞ்சை அருகே நடந்துள்ளது.



வடமாநில ஐஸ் வியாபாரியின் பெட்டியையும், வாகனத்தையும் பிடிங்கி வைத்துக் கொண்டு தகராறு செய்த விவகாரத்தில், இளைஞரை வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் 22 வயது இளைஞரும், 18 வயது சிறுவனும் தேடப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை பட்டத்துஅரசி அம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் மாலை உத்திரபிரதேச மாநிலம் மேன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த வசீம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். அப்போது கோயில் அருகே அமர்ந்திருந்த ராஜேந்திரம் அம்மன்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் (22) மற்றும் 18, 17 வயது சிறுவர்கள் என மூவரும் சேர்ந்து எங்கள் ஊருக்கு வடமாநிலத்திலிருந்து வந்து அதிக விலைக்கு ஐஸ் விக்கிறியா எனக்கூறி இரு சக்கர வாகனத்தை பிடிங்கி கொண்டு நசீமை அடித்து, உதைத்துள்ளனர். வாகனத்தையும், ஐஸ் பெட்டியையும் கேட்ட நசீமை விரட்டி அடித்துள்ளனர். அப்போது அந்த மூன்று பேரும் போதையில் இருந்துள்ளனர்.

பின்னர் நசீம், தன்னுடன் ஐஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலியில் உள்ள ஹரிபிரசாத் (22) என்பவரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து ஐஸ் பெட்டியுடன் கூடிய வாகனத்தை எடுக்க நசீம், ஹரிபிரசாத், ஒன்பத்து வேலியைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) ஆகிய மூவரும் மணக்கரம்பைக்கு வந்துள்ளனர்.


 




 
அப்போது சாமிநாதன் உள்பட அந்த 2 சிறுவர்களும் அங்கு இருந்துள்ளனர். அவர்களிடம் சென்று நசீம் உள்ளிட்டவர்கள் மன்னிப்பு கேட்டு, வாகனத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தரமுடியாது எனக்கூறி தகராறு செய்து அரிவாளால் வெட்ட வந்தபோது, நசீமும், ஹரிபிரசாத்தும் தப்பி ஓடியுள்ளனர்.

ஆனால், அவர்களிடம் கார்த்திகேயன் சிக்கிக் கொண்டார். போதையில் இருந்த சாமிநாதன் உள்பட மூவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் சாமிநாதன் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். இதையடுத்து சாமிநாதன் உட்பட மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிபிரசாத் நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் அளித்தார். உடன் திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன், ஆய்வாளர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 





இந்த கொலை வழக்கு தொடர்பாக ஹரிபிரசாத் அளித்த புகாரின் பேரில்,  17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சாமிநாதன் மற்றும் 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர். போதையில் தற்போது வாழ்க்கையை இழந்துள்ளான் அந்த 17 வயது சிறுவன்.  இதேபோல் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை சிவகங்கை பூங்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் போதையில் சாலையோர வியாபாரிகளை தாக்கி கைதான சம்பவமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண